×

சூளகிரி அருகே செந்நாய் கடித்து 14 ஆடுகள் பலி

சூளகிரி, மே 30: கிருஷ்ணகிரி  மாவட்டம், சூளகிரி தாலுகா சென்னபள்ளியை சேர்ந்தவர் போடியப்பா(70).  விவசாயி. இவர் வீட்டில் 25க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு,  வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை மேய்ச்சலுக்கு  திறந்து விடுவதற்காக பட்டிக்கு சென்று பார்த்தபோது, 15க்கும் மேற்பட்ட  ஆடுகள் ரத்தகாயத்தோடு, ஆங்காங்கே விழுந்து கிடந்தது. இதனை பார்த்து  அதிர்ச்சியடைந்த போடியப்பா சூளகிரி போலீசாருக்கும், வனத்துறையினருக்கும்  தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர்  மற்றும் போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். ஆய்வில், அங்கு  சிறுத்தையின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆடுகளை சிறுத்தை  கடித்துக் கொன்றது உறுதிப்படுத்தப்பட்டது.
ஊருக்குள் சிறுத்தை புகுந்து  ஆடுகளை கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Tags : sneezing ,Sulagiri ,
× RELATED மேய்த்தவர் பாதிப்பு ஆடுகளுக்கு தனிமை: கர்நாடகாவில் பரபரப்பு