×

கீழக்கரை பகுதியில் மின்தடையால் தூங்க முடிய வில்லை பொதுமக்கள் வேதனை

கீழக்கரை, மே 17: கீழக்கரையில் உள்ள பல மின்மாற்றிகளில் நடுத்தெருவில் வைத்திருக்கும் 12வது மின்மாற்றியும் ஒன்று (டிரான்ஸ்பார்மர்) இந்த மின் மாற்றியில் கடந்த பல வருடங்களாக இரவில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. சாலை தெருவில் 26வது புது மின்மாற்றி அமைத்து 12ல் இருந்து 50 சதவிகித மின் இணைப்புகள் அந்த மின்மாற்றிக்கு மாற்றியதால் இரவில் மின்தடை ஏற்படாமல் நடுத்தெரு மக்கள் நிம்மதியாக இருந்தனர்.

இந்நிலையில் சாலை தெருவில் 26வது மின்மாற்றியுள்ள 50 சதவிகித மின் இணைப்புகளை மீண்டும் நடுத்தெருவில் உள்ள 12வது மின் மாற்றியில் மின் இணைப்புகளை இணைத்து விட்டனர். இதனால் மீண்டும் நடுத்தெருவில் உள்ள மக்கள் இரவில் மினசாரம் தடைபட்டு கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

நுகர்வோர் பாதுகாப்பு கழக செயலாளர் செய்யது இபுராகிம் கூறுகையில், ‘வீடுகளின் இணைப்புகளுக்கு மின்சாரம் குறைவாக வருவதாக கூறியும் மின்வாரிய ஊழியர்களை ஒரு சிலர் கவனித்ததால் அந்த மின்மாற்றியில் உள்ள 50 சதவிகித மின் இணைப்புகளை நடுத்தெரு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் 12வது மின்மாற்றியில் இணைத்து விட்டனர். இதனால் தற்போது இப்பகுதியில் இரவு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. ஊழியர்கள் வந்து சரி செய்து விட்டு சென்றாலும் அடுத்தடுத்து மின் தடை ஏற்படுகிறது.

இதனால் பல வீடுகளில் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். முஸ்லீம்கள் அதிகமாக உள்ள இப்பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால், அதிகாலை 2.30 மணியளவில் எழுந்து ரமலான் நோன்பு வைக்க முடியாமல் கடும் சிரமப்படுகின்றனர்.
மேலும் வெயில் காலம் என்பதால் பலர் வீட்டில் நிம்மதியாக தூங்க முடியாமால் சிரமப்படுகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த மின் மாற்றியில் தற்போது கூடுதலாக கொடுக்கப்பட்ட மின் இணைப்புகளை மீண்டும் வேறு மின்மாற்றிக்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்றார்.

Tags : area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...