×

கீழக்கரை கிழக்கு தெருவில் ஆபத்தான கழிவுநீர் மூடி மாற்றப்படுமா?

கீழக்கரை, மே 16: கீழக்கரை கிழக்கு தெருவில் சேதமடைந்த கழிவுநீர் மூடை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரை கிழக்குத் தெருவில் தொடக்கப்பள்ளி எதிரே நடுரோட்டில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்துள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே நகராட்சி நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நகராட்சி சார்பில் நடுரோட்டில் கழிவுநீர் கால்வாய் அமைத்து மூடி போட்டுள்ளனர். இந்நிலையில் கிழக்குத் தெருவில் தொடக்கப்பள்ளி எதிரே போட்ட கால்வாய் மூடி தரமற்ற நிலையில் இருந்தது. இதனால் ஆட்டோ மற்றும் டூவீலர்கள் போன்ற வாகனங்கள் மூடியில் ஏறி சென்றதால் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் உடைந்து நொருங்கியது. இப்பகுதியில் செல்லும் வாகனங்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் உள்ளே விழுந்து விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஆகவே நகராட்சி நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சாகுல் ஹமீது கூறுகையில், ‘கீழக்கரை கிழக்குத்தெரு கைரத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி எதிரே நகராட்சி நிர்வாகம் தரமற்ற கழிவுநீர் கால்வாய் மூடியை போட்டிருந்தது. இதனால் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் ஆட்டோ மற்றும் டூவீலர் போன்ற வாகனங்கள் ஏறி செல்வதை தாங்க முடியாமல் உடைந்து நொருங்கி விட்டது. இதுகுறித்து நகராட்சியில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கால்வாய் மூடி உடைந்து நொருங்கி கிடப்பதால் இப்பகுதியில், செல்லும் வாகனங்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் உள்ளே விழுந்து விபத்து ஏற்படும் முன்பு நகராட்சி நிர்வாகம் அந்த மூடியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : east ,underground ,
× RELATED தஞ்சாவூரில் பொதுமக்களிடம் கத்தியை...