×

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி 6ம் தேதி துவக்கம்

புதுக்கோட்டை, மே 15: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி வரும் 6ம் தேதி துவங்குகிறது. இது குறித்து கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கிராம நிர்வாக அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கிராம கணக்குகளை ஒவ்வொரு வருடமும் அந்தந்த பசலியின் (ஆண்டு) இறுதி மாதத்தில் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் துணை கலெக்டர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல நடப்பு பசலி ஆண்டிற்கு (1428) புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழ்கண்ட அலுவலர்களால் வருகிற 6ம் தேதி முதல் கிராம கணக்குகள் தணிக்கை தொடங்கி நடைபெற உள்ளது. வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 6ம் தேதி வாராப்பூர் உள்வட்டத்திற்கும், 11ம் தேதி புதுக்கோட்டை உள்வட்டத்திற்கும் நடைபெற உள்ளது.

இதேபோல குளத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் 6ம் தேதி நார்த்தாமலை உள்வட்டத்திற்கும் நடக்கிறது. 11ம் தேதி மாத்தூர் உள்வட்டத்திற்கும், 12ம் தேதி கிள்ளுக்கோட்டை உள்வட்டத்திற்கும் நடக்கிறது. 13ம் தேதி குன்னண்டார்கோவில் உள்வட்டத்திற்கும், 18ம் தேதி கீரனூர் உள்வட்டத்திற்கும் நடைபெற உள்ளது. அறந்தாங்கி தாசில்தார் அலுவலகத்தில் 6ம் தேதி அத்தாணி உள்வட்டத்திற்கும், 11ம் தேதி நாகுடி உள்வட்டத்திற்கும், 12ம் தேதி பூவத்தக்குடி உள்வட்டத்திற்கும், 13ம் தேதி அரசர்குளம்  உள்வட்டத்திற்கும், 18ம் தேதி சிலட்டூர் உள்வட்டத்திற்கும், 19ம் தேதி அறந்தாங்கி உள்வட்டத்திற்கும் நடைபெற உள்ளது.  ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் 6ம் தேதி வல்லநாடு உள்வட்டத்திற்கும், 11ம் தேதி கீரமங்கலம் உள்வட்டத்திற்கும், 12ம் தேதி வெண்ணாவல்குடி உள்வட்டத்திற்கும், 13ம் தேதி ஆலங்குடி உள்வட்டத்திற்கும் நடைபெற உள்ளது. மணமேல்குடி தாசில்தார் அலுவலகத்தில் 6ம் தேதி பெருமருதூர் உள்வட்டத்திற்கும், 11ம் தேதி கோட்டைப்பட்டிணம் உள்வட்டத்திற்கும், 12ம் தேதி சிங்கவனம் உள்வட்டத்திற்கும், 13ம் தேதி மணமேல்குடி உள்வட்டத்திற்கும் நடைபெற உள்ளது. இலுப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் 6ம் தேதி குடுமியான்மலை உள்வட்டத்திற்கும், 11ம் தேதி சித்தன்னவாசல் உள்வட்டத்திற்கும், 12ம் தேதி வீரப்பட்டி உள்வட்டத்திற்கும், 13ம் தேதி இலுப்பூர் உள்வட்டத்திற்கும் நடைபெற உள்ளது.

கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் 6&ந் தேதி புதுநகர் உள்வட்டத்திற்கும், 11&ந் தேதி கல்லாக்கோட்டை உள்வட்டத்திற்கும், 12ம் தேதி கந்தர்வகோட்டை உள்வட்டத்திற்கும் நடைபெற உள்ளது. கறம்பக்குடி தாசில்தார் அலுவலகத்தில் 6ம் தேதி மழையூர் உள்வட்டத்திற்கும், 11ம் தேதி கறம்பக்குடி உள்வட்டத்திற்கும் நடைபெற உள்ளது. பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் 6ம் தேதி காரையூர் உள்வட்டத்திற்கும், 11ம் தேதி அரசமலை உள்வட்டத்திற்கும், 12ம் தேதி பொன்னமராவதி உள்வட்டத்திற்கும் நடைபெற உள்ளது. ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் 6ம் தேதி பொன்பேத்தி உள்வட்டத்திற்கும், 11ம் தேதி மீமிசல் உள்வட்டத்திற்கும், 12ம் தேதி ஏம்பல் உள்வட்டத்திற்கும், 13ம் தேதி ஆவுடையார்கோவில் உள்வட்டத்திற்கும் நடைபெற உள்ளது.
விராலிமலை தாசில்தார் அலுவலகத்தில் 6ம் தேதி கொடும்பாளூர் உள்வட்டத்திற்கும், 11ம் தேதி நீர்பழனி உள்வட்டத்திற்கும், 12ம் தேதி விராலிமலை உள்வட்டத்திற்கும் நடைபெற உள்ளது. திருமயம் தாசில்தார் அலுவலகத்தில் 6ம் தேதி செங்கீரை உள்வட்டத்திற்கும், 11ம் தேதி கீழாநிலை உள்வட்டத்திற்கும், 12ம் தேதி கோட்டூர் உள்வட்டத்திற்கும், 13ம் தேதி விராச்சிலை உள்வட்டத்திற்கும், 18ம் தேதி திருமயம் உள்வட்டத்திற்கும் நடைபெற உள்ளது. வருவாய் தீர்வாயம் குறிப்பிட்ட நாட்களில் காலை 10 மணிக்கு அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் தொடங்கி நடைபெறும். கடைசி நாளன்று வருவாய் தீர்வாயம் முடிந்தவுடன் வருவாய் தீர்வாய அலுவலர் தலைமையில் குடிகள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் கொடுத்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : district ,Pudukottai ,
× RELATED புதுக்கோட்டையில் இரண்டு நாட்களாக மழை