×

மின்சாரம் தயாரிக்க பிளாண்ட் அமைப்பதற்காக ஏற்காட்டில் டன் கணக்கில் குவியும் குப்பை ஏற்காட்டில் டன் கணக்கில் குவியும் குப்பை

சேலம், மே10: ஏற்காடு ஒன்றியத்தில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் இருந்து வரும் டன் கணக்கிலான குப்பையை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே குவித்து வருவதால் சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்கின்றனர். இந்த நிலையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க பிளாண்ட் அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  சேலம் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோடை வசஸ்தலம் ஏற்காடு. இதன் அழகை ரசிக்க கர்நாடகம், கேரளம், பாண்டிச்சேரி மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவர்கள் இங்குள்ள சுற்றுலா தலமான பாக்கோடா பாய்ண்ட், லேடிஸ், சென்ஸ் சீட், சேர்வராயன் உச்சி, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களின் அழகை பார்த்து ரசித்து, செல்பி எடுத்து மகிழ்கின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் இங்கு ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ஏராளமாக உள்ளன. இங்கிருந்து வரும் டன் கணக்கான குப்பைகள் அனைத்தும் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலம், சேவை மையக்கட்டம் அருகே கொட்டப்பட்டு வருகிறது. ஏற்காட்டின் அழகை ரசிக்கலாம் என ஆசையோடு செல்லும் சுற்றுலா பயணிகளின் மூக்கை துளைத்து வருகிறது, இந்த குப்பை நாற்றம். இதனை அகற்ற வேண்டும் என சுற்றுலா பயணிகள் தரப்பில் தற்போது கோரிக்ைக வலுத்து வருகிறது. இருப்பினும் அதே இடத்தில் திறந்தவெயிலில் குப்பையை கொட்டி வருகிறது ஏற்காடு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்.இது குறித்து ஏற்காடு ஊராட்சி ஒன்றிய பிடிஏ., ராமச்சந்திரன் கூறியதாவது, ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 9 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இங்குள்ள ஜெரினாகாடு என்ற இடத்தில்தான் குப்பை குடோன் கடந்த 40 ஆண்டாக இருந்தது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் குப்பைக்ெகாட்டுவதால் பலருக்கும் உடல்நிலை பாதிப்பதாக கூறி போராட்டம் நடத்தினர். அங்கு குப்பைக்கொட்டச்சென்ற எங்கள் குப்பை வண்டியை சிறைபிடித்தனர். இதனால் அங்கு தற்போது குப்பைக் கொட்டுவதில்லை.

ஏற்காடு சுற்றுலா தலம் என்பதால் ஏராளமான ேஹாட்டல்கள் உள்ளன. இங்கிருந்தும் பஞ்சாயத்தில் உள்ள கிராமங்களில் இருந்தும் வார நாட்களில் 1.5 டன் குப்ைபயும், விடுமுறை நாட்களில் 2.5 டன் குப்பையும் வெளியேறுகிறது. குறிப்பாக ஏற்காடு, மஞ்சக்குட்டை பகுதியில் இருந்துதான் அதிகளவில் குப்பை வெளியேறுகிறது. இதனை கொட்ட ஏற்காட்டில் பல இடங்களில் முயன்றோம். ஆனால் அனைத்து இடங்களிலும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் வேறுவழியில்லாமல் கடந்தாண்டு நடந்த மலர்கண்காட்சியின் போது கிடைத்த குப்பைகளை சேலம், செட்டிச்சாவடியில் கொட்ட 15 நாட்கள் அனுமதி வாங்கி கொட்டினோம். இந்த நிலையில் தான் ஏற்காட்டு ஊராட்சி ஒன்றியம் அலுவலத்திற்கு சொந்தமான இடத்தில் தற்போது கொட்டி வருகிறோம். இங்கு கொட்டப்படும் குப்பையில் இருந்து மின்சாரம் தாயரிக்க தற்போது பிளாண்ட் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி கடந்த 5 மாதமாக நடக்கிறது. சுமார் ₹40 லட்சம் செலவில் நடக்கும் இந்த பணி இன்னும் 1 மாதத்தில் நிறைவடையும். அதன்பின்னர் குப்பைகளை தரம் பிரித்து அதிலிருந்து மீத்தேன் வாயு உற்பத்தி செய்யப்படும். இதிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படும். இதுபோன்ற நடைமுறை ஊராட்சியில் அமைப்பது இதுதான் முதல்முறை. இது தயாரானால் இந்த பகுதியில் குப்பைக்கொட்டுவது முற்றிலும் தவிர்க்கப்படும். இவ்வாறு பிடிஒ., ராமசந்திரன் கூறினார்.

Tags : plant ,Yerawada ,
× RELATED பட்டாசு ஆலை விபத்து: ஆலை உரிமையாளர் ரூ.5 லட்சம் நிதியுதவி