சுயேட்சைகளின் புகார்களை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் ஆங்காங்கே வெளியூர் ஆட்கள் தற்காலிக பந்தல் அமைத்து ஏரியா வாரியாக கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவர்கள் வீடு வீடாக சென்று வீட்டில் உள்ள வாக்காளர்களை கணக்கெடுத்து அவர்களின் மொபைல் என்னை பதிவு செய்கின்றனர். இது வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்கான முதற்கட்ட பணி எனவும், இதேபோல் சில இடங்களில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பறக்கும் படைக்கும் பலமுறை அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில நேரங்களில் புகார் கொடுத்த இரண்டு மணி நேரம் கழித்து அந்த இடத்திற்கு பறக்கும் படை தவழ்ந்து செல்வதாகவும் சுயேட்சை வேட்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒருவேளை தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை யெனில் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் கூறுகின்றனர்.

Related Stories:

>