×

நாகநாதசுவாமி கோயிலில் மழை வேண்டி வருண யாகம்

பரமக்குடி, மே 8: நயினார்கோவிலில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில் மழைவேண்டி சிறப்பு வருண யாகம் நடைபெற்றது.தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முக்கிய திருக்கோயில்களில் இந்தாண்டு நல்லமுறையில் மழை பேய்ய வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்படவேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதையொட்டி அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோயில்களில் யாகம் நடைபெற்று வருகிறது. இதேபோல் பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் மழை வேண்டி சிறப்பு வருண யாகம் நடைபெற்றது. வரணஜபம், நந்திபூஜையோடு அமிர்த வர்ஷண, மேக வர்ஷிணி, கேதாரி, ஆனந்தபைரவி, ரூபகல்யாணி அகிய ராகங்களுடன் பாடல்களுடன், ஓதுவார்களை கொண்டு தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டது. சிவபெருமானுக்கு வருண அபிஷேகம், ருத்ராபிஷேகம் நடைபெற்றது. நாகநாதசுவாமிக்கும், சௌந்திரநாயகி அம்மனுக்கும் கும்பங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மழைவேண்டி நடைபெற்ற 2 மணி நேர வருணயாக பூஜையில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் வைரவசுப்பிரமணியன் உள்ளிட்ட கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags : Varun Yagam ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை