×

கிருஷ்ணகிரியில் 2ம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி, மே 8: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி மாவட்ட பிரிவு அலுவலகத்தின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், நீச்சல் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான முதல்கட்ட பயிற்சி முகாம், கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடந்தது. 2ம் கட்ட பயிற்சி முகாம், கடந்த 1ம் தேதி துவங்கியது. இம்முகாம் வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 60 மாணவ-மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 4 நீச்சல் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். 3ம் கட்டமாக, வரும் 16ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை பயிற்சி முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்துள்ளார். 

Tags : Krishnagiri ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்