×

நீட் தேர்வு எழுதுவோர் ஹால்டிக்கெட்டில் பிழை இருந்தால் திருத்தலாம்

ராமநாதபுரம், ஏப் 3: மருத்துவ படிப்புகளுக்கான நீட்தேர்வு மே 5ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தேர்வர்களுக்கான தேர்வு மையம் மற்றும் பள்ளி விபரங்கள் தவறுதலாக அச்சிப்பட்டிருந்தால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். தவறுதலாக உள்ள ஹால்டிக்கெட்டுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கொடுத்து பிழைகளை திருத்தம் செய்து கொள்ளலாம் என கல்வித்துறை அறிவித்தது.

வரும் மே 5ம் தேதி தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் ஹால்டிக்கெட்டில் பிழைதிருத்தம் செய்வோர் உடன் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்தாண்டு தமிழில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆங்கிலம் பிற மொழிகளில் தேர்வு எழுதுபவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : editors ,
× RELATED நியூஸ்கிளிக் தொடர்புடைய இடங்களில்...