×

சூளகிரி அருகே மேலுமலையில் கொலையுண்ட பெண் யார்?

சூளகிரி, ஏப். 22: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த மேலுமலையில் இருந்து, பிஜிதுர்க்கம் செல்லும் வழியில் வனப்பகுதியில், நேற்று முன்தினம் காலை பாறையில், தேங்கி இருந்த தண்ணீரில் பெண் சடலமாக கிடந்தார். அவரது தலை தண்ணீரில் அமுக்கி மூழ்கடிக்கப்பட்டும், தலை மீது பெரிய கல் போடப்பட்டும் இருந்தது. இது குறித்த தகவலின் பேரில், டிஎஸ்பி மீனாட்சி, சூளகிரி இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.கொலை செய்யப்பட்டு கிடந்த இளம்பெண் பச்சை நிறத்தில் மேலாடையும், நீல நிறத்தில் லெக்கின்ஸ் மற்றும் காலில் சாக்ஸ் அணிந்திருந்தார். அவரது இடதுகையில் பிரேம் என்று ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. கால் விரலில் மெட்டி அணிந்திருந்தார். ஆனால், அவரை பற்றி வேறு எந்த விவரங்களும் தெரியவில்லை. அவரது சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், சூளகிரி எஸ்ஐ யுவராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், மேலுமலை மற்றும் சுற்றுவட்டாரா பகுதிகளில் காணாமல் போன பெண்கள் பட்டியல் எடுத்து விசாரித்து வருகின்றனர். மேலும் கர்நாடகா மாநிலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கொலையான பெண் குறித்து விசாரித்து வருகின்றனர். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொன்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Tags : Sulagiri ,
× RELATED கன்னியாகுமரி அருகே கர்பிணிப்...