×

சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தசாவதாரம் பக்தர்கள் விடிய விடிய தரிசனம்

பரமக்குடி, ஏப்.22: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள்கோவில் சித்திரை திருவிழாவினை யொட்டி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிழ்ச்சி நடந்தது. அப்போது தசாவதாரம் விடிய விடிய நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டுதருடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகங்களுடன் ஆராதனைகளும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வைகை ஆற்றில் அதிகாலை மஞ்சள் பட்டு உடுத்தி பெருமாள் வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் மேச்சத்திரத்தில் உள்ள தல்லாக்குளம் என்ற இடத்தில் எதிர்சேவையும், மஞ்சன்பட்டினம், காட்டுபரமக்குடி, ஒட்டபாலம் உள்ளிடட பல்வோறு மண்டகபடிகளில் பக்தர்களுக்கு குதிரை வாகனத்தில் காட்சி அளித்தார். பிறகு வண்டியூர் என்னும் காக்காதேப்பு சேலையில் சந்தனகாப்பு அணிந்து காட்சியளித்து, நேற்று முன்தினம் இரவு மண்டூக முனிவருக்கு சபா விமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து தசாவராதம் நடைபெற்றது. இதில் பொருமாள் அர்ச்ச ,மச்ச ,கூர்ம, வாமண, பரசுராம, பலராமா, ராம, மோகினி அவதாரங்களில் விடிய விடிய பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags : devotees ,Sundaraja Perumal ,
× RELATED திருப்பதி கோயிலில் ரூ.4.23 கோடி உண்டியல் காணிக்கை