ராமநாதபுரம், ஏப்.22: ராமநாதபுரம் உச்சிப்புளி அருகே நாகாச்சி கிராம் ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் அப்பகுதியில் வசிக்கும் ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாகவும், சொந்தமாக தொழில் செய்வதை ஊக்குவிக்கும் வகையிலும் இலவசமாக தையல் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. மடத்தில் நடந்த விழாவில் மடத்தின் தலைவர் சுதபானந்தர் தலைமை தாங்கினார். பெங்களூர் கேன்பின் ஹோம் பொது மேலாளர் அதனுபாக்சி ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மடத்தின் தொண்டர் சென்னையை சேர்ந்த ராஜன், ஜமுனா ராஜன் தையல் பயிற்சி முடித்த 40 மாணவிகளுக்கு சான்றிதழ்கள், தையல் மிஷின் வழங்கினார். கரூர் வைசியா வங்கியின் முன்னாள் சேர்மன் சாமிநாதன் ஏழை பெண்களுக்கு புத்தாடைகளை வழங்கினார். தொடர்ந்து இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. தொண்டர் சிவராமன் நன்றி கூறினார்.










