×

ராமநாதபுரம் நகர் பகுதியில் நவாஸ்கனி தீவிர பிரசாரம்

ராமநாதபுரம், ஏப்.17: ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து சந்தைத் திடலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்திற்கு. திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். சிறப்புரையாற்றிய இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்முகைதீன் பேசுகையில்,
ராமேஸ்வரம் கோயில் கட்டுவதற்கு ரகுநாதசேதுபதி அமைச்சரவையில் இடம்பெற்ற வள்ளல் சீதக்காதியே காரணம். வாலிநோக்கத்திலிருந்து கல் எடுத்து ராமேஸ்வரத்தில் ராமர் கோவிலும், கீழக்கரையில் பெரிய பள்ளி வாசலும் கட்டப்பட்டது என்பதை மறந்து விடக் கூடாது. ஆகவே மதத்தை வைத்து மக்களவை வேறுபடுத்துவது சரியல்ல என்றார்.

பொன் முத்துராமலிங்கம் பேசுகையில், 5 ஆண்டுகாலத்தில் அதிக எம்பிகளை வைத்துள்ள அதிமுக தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரியால் மக்களை அவதிக்குள்ளாக்கினார்கள். பிரதமர் மோடியை பதவியை விட்டு அனுப்புவது காலத்தின் கட்டாயம். சரித்திரத்தின் நிர்பந்தம் என்றார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், திமுக முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், எம்எல்ஏ முகம்மது அபுபக்கர், மாநில பொருளாளர் ஷாஜகான், மாவட்ட தலைவர் வருசை முகமது, மதிமுக மாவட்ட செயலாளர் குணா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்  காசிநாததுரை, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முருகபூபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சாகுபர் சாதிக் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Nawazaki ,area ,Ramanathapuram Nagar ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது