×

ரித்தீஸ் மறைவால் பிரசாரத்தை ரத்து செய்த வேட்பாளர்

கீழக்கரை, ஏப்.16: முன்னாள் எம்பியும், திரைப்பட நடிகருமான ஜே.கே.ரித்தீஸ் கடந்த 13ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இந்த தகவல் அறிந்ததும் பிரசார பணியில் இருந்த திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் நவாஸ் கனி பிரசாரத்தை உடனே ரத்து செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது அபூபக்கர், உள்ளிட்டோர் ரித்தீஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது உறவினர்களிடம் இரங்கலை தெரிவித்தனர். மறைந்த ரித்தீஸ் எதிர்க்கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், மறைவு செய்தி அறிந்ததும் தேர்தல் வேலையிலும் பிரசாரத்தை ரத்து செய்து விட்டு வந்த நவாஸ்கனி மற்றும் கூட்டணி தலைவர்களின் செயல் அரசியல் நாகரீகத்தை மேலோங்க செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : Candidate ,campaign ,Rite ,
× RELATED இலவச ரேஷன் பொருட்களை உங்க சொந்த காசுல...