×

பரமக்குடியில் வீதி வீதியாக அதிமுக வேட்பாளர் பிரசாரம்

பரமக்குடி, ஏப்.16: பரமக்குடி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகர் நேற்று பரமக்குடி நகர் பகுதியிலான காட்டுபரமக்குடி, சேதுபதி நகர் மற்றும் நயினார்கோவில் ஒன்றியம் வலசை, யாதவர் குடியிருப்பு, வாணியவல்லம், பாப்பர்கூட்டம், காச்சான், காரடர்ந்தகுடி, நகரமங்களம், பணிதவயல் உள்ளிட்ட கிராமங்களில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். அனைத்து கிராமங்களிலும் வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அவர்களிடையே வேட்பாளர் சதன்பிரபாகர் பேசுகையில், அதிமுக ஆட்சியில் பிறக்கும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் பயனடையும் வகையில் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். பெண் குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கியது அதிமுக அரசு தான். வறுமையை ஒழிக்க பல திட்டங்களை அதிமுக கொண்டு வந்துள்ளது. பரமக்குடி தொகுதியில் உள்ள அனைத்து தேவைகளையும் செய்து கொடுக்க அதிமுக.விற்கு வாக்களிக்க வேண்டும். மக்களுக்காக உழைக்க வாய்ப்பு தாருங்கள் என கேட்டுகொண்டார். உடன் மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில மகளிரணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி, நகர் செயலாளர் கணேசன், முன்னாள் நகர் செயலாளர் ஜமால், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வடிவேல் முருகன், முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் குப்புசாமி, நகர் அம்மா பேரவை வடமலையான், தேமுதிக தொகுதி பொறுப்பாளர் ராஜேஸ்கண்ணன், பாஜக.பொறுப்பாளர் பொன் பாலகணபதி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி வினோத் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

Tags : street prostitute ,AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...