×

நம்புதாளை பதினெட்டாம்படி கருப்பர் கோவில் சித்திரை திருவிழா

தொண்டி, ஏப். 11: நம்புதாளை பதினெட்டாம்படி கருப்பர் கோவில் சித்திரை திருவிழா நேற்று காப்புகட்டுதலுடன் துவங்கியது. பத்து நாட்களுக்கு மண்டகபடியார்களின் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொண்டி அருகே உள்ள பதினெட்டாம்படி கருப்பர் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. சுற்றுவட்டார மக்களின் குல தெய்வ கோவிலாகவும் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். வரும் 19ம் தேதி சித்ரா பவுர்ணமி என்பதால் அன்று பூக்குழி திருவிழா நடைபெறும். இதையடுத்து நேற்று காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இனி வரும் பத்து நாட்களுக்கு மண்டகபடியார்களின் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள் தினமும் இரவு நடைபெறும். முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா 19ம் தேதி காலை நடைபெறும். விழாவில் சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : festival ,Chaiti ,
× RELATED சீனாவின் டிராகன் படகுத் திருவிழா கோலாகலம்..!!