×

முனியப்பன் கோயிலில் பொங்கல் வைபவம்

ஆட்டையாம்பட்டி, ஏப்.11:  ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள முத்தன்னம்பாளையம் முத்து முனியப்பன் கோயிலில் பொங்கல் விழா நடைபெற்றது.
முன்னதாக நேற்று காலை, கத்தி ஊர்வலம் நடைபெற்று கோயிலை அடைந்தது. இதனையடுத்து முத்து முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், பலவிதமான வண்ண மலர்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. சேலம், வீராணம், ஆத்தூர், ஆட்டையாம்பட்டி மற்றும் உள்ளூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழிகள் பலியிட்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அதை தொடர்ந்து, கோயில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

Tags : ceremony ,Muniyappan Temple ,
× RELATED பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா