×
Saravana Stores

கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமி கோயில் திருவிழா சபரிமலை தந்திரி கொடியேற்றினார்

நாகர்கோவில், ஏப். 11:  நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமி கோயில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. காலை 5 மணிக்கு கணபதிஹோமம், காலை 9 மணிக்கு திருக்கொடியேற்றப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கொடியை ஏற்றிவைத்தார். திருக்கொடியேற்று நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.  இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசையும், 9 மணிக்கு புஷ்ப வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது.  இன்று மாலை இசைப்பாட்டு மன்றம், 9 மணிக்கு சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளல். 12ம் தேதி மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு மதுரை முத்துவின் நகைச்சுவை நிகழ்ச்சி, 9.30 மணிக்கு அனுமன் வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடக்கிறது. 15ம் தேதி இரவு 9.30 மணிக்கு யானை வாகனத்தில் எழுந்தருளல் நடக்கிறது. 16ம் தேதி திருவனந்தபுரம் நடிகை லெட்சுமி குழுவினரின் பரதநாட்டியம் நடைபெறுகிறது. இரவு 9.30 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறுகிறது.  விழாவை முன்னிட்டு தினமும் காலை 6 மணிக்கு சுவாமி எழுந்தருளல், பகல் 11 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.

9ம் திருநாளான 18ம் தேதி காலை 7.45 மணிக்கு திருத்தேர் வடம் தொட்டு இழுத்தல், மதியம் அன்னதானம்,  இரவு 8 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி பரிவேட்டைக்கு  எழுந்தருளல் நடக்கிறது. இரவு இயக்குநரும், நடிகருமான பார்த்திபனின் சிறப்பு பட்டிமன்றம்  நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு சப்தா வர்ணம் மற்றும் சுவாமி திருவீதி உலா வருதல், 10ம் திருநாளன்று காலை அன்னதானம், மாலை 4 மணிக்கு சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல், அலங்கார குதிரை பவனி,  சிறப்பு பஞ்ச வாத்தியம், முத்துக்குடையுடன் யானை பவனி, செண்டை மேளம், சிங்காரி மேளத்துடன் ஆறாட்டு பூஜை நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு தெப்ப திருவிழா நடைபெறுகிறது.

Tags : festival ,Krishnaswamy Temple ,
× RELATED தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில்...