×

குளச்சல் அருகே பெண்ணை தாக்கி மிரட்டல்

குளச்சல், ஜன.12: குளச்சல் அருகே மரமடி பகுதியை சேர்ந்த ஜஸ்டின் மனைவி வெண்ணிலா (53). இவர் மார்க்சிஸ்ட் லெலினிஸ்ட் (விடுதலை) கட்சியின் மாவட்ட கமிட்டி உறுப்பினர் மற்றும் முற்போக்கு பெண்கள் கழக மாவட்ட பொதுச்செயலாளராகவும் உள்ளார்.

கடந்த மாதம் 26ம் தேதி குளச்சலில் உள்ள கட்சி ஆபீசில் இருக்கும்போது அதே பகுதியை சேர்ந்த டல்லஸ் (58) முன்விரோதம் காரணமாக வெண்ணிலாவை தகாத வார்த்தையால் திட்டி எச்சரிக்கை விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து வெண்ணிலா குளச்சல் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் டல்லஸ் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Kulachal ,Justin ,Vennila ,Maramadi ,Marxist Leninist (Liberation) Party ,Progressive Women's League ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை