×

தென்தாமரைக்குளத்தில் மூச்சுதிணறல் ஏற்பட்டு கூலித்தொழிலாளி சாவு

நாகர்கோவில், ஜன. 9: ராஜாக்கமங்கலம் அருகே அண்ணா காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சிவா (42). கூலித்தொழிலாளி. சிவாவுக்கு அடிக்கடி மூச்சுதிணறல் ஏற்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 4ம் தேதி உறவினர் வீடான தென்தாமரைக்குளம் அருகே பொற்றையடி, கரம்பவிளை பகுதியை சேர்ந்த சிவதாணு என்பவர் வீட்டிற்கு சிவா சென்றுள்ளார். அங்கு வைத்து கடந்த 6ம் தேதி அவருக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. உடனே அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர் அவரை பார்த்துவிட்டு சிவா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது பற்றி தாயார் சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thenthamaraikulam ,Nagercoil ,Arumugam ,Siva ,Anna Colony ,Rajakkamangalam ,Asaripallam Government Medical College Hospital ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை