×

களியல் அருகே மனைவி, மகளை தாக்கிய தொழிலாளி

மார்த்தாண்டம், ஜன.12: களியல் அருகே மேல்பரூர்விளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (43). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி சிந்து (42). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். சுரேஷ் தினமும் குடித்து விட்டு மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு மது குடித்து விட்டு வந்த சுரேஷ் மனைவி மற்றும் மகள்களை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளார்.

மேலும் வீட்டில் இருந்த மீன் வெட்டும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த சிந்து மற்றும் மூத்த மகள் அருமனை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சம்பவம் குறித்து சிந்து கடையாலுமூடு போலீசில் புகாரளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேசை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

 

Tags : Kaliyal ,Marthandam ,Suresh ,Melparurvilai ,Sindhu ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை