×

கமுதி பகுதியில் நவாஸ்கனி தீவிர பிரசாரம்

கமுதி, ஏப். 10: கமுதி ஒன்றியத்தில் திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் நவாஸ்கனி தீவிர வாக்கு சேகரித்தார். அவர், கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கமுதியில் உள்ள தேவர் சிலை, காமராஜர் சிலை, மருதுபாண்டியர் சிலை, மற்றும் வெள்ளையாபுரத்தில் உள்ள இமானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவித்தார்.கமுதியில் நாடார் உறவின்முறை, செட்டியார் உறவின்முறை, முஸ்லிம் ஜமாத், அகமுடையார் சங்கம், உட்பட அனைத்து சமுதாய அமைப்பு நிர்வாகிகளிடம் நேரில் சென்று வாக்கு சேகரித்தார். இப்பகுதிக்கு நிறுத்தப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவேன் என்றும், இப்பகுதியின் நீண்டநாள் கனவாகவே இருந்து வரும் ரயில் போக்குவரத்திற்காக பாடுபடுவேன் என்று உறுதி கூறினார்.
பெருநாழி, கோவிலாங்குளம், புதுக்கோட்டை, செங்கப்படை, கோட்டைமேடு, கண்ணார்பட்டி, வெள்ளையாபுரம், சிங்கப்புலியாபட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.இவருடன் திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Nawazaki ,campaign ,area ,Kamuddhi ,
× RELATED இலவச ரேஷன் பொருட்களை உங்க சொந்த காசுல...