×

திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி வாக்குறுதி

திருச்சுழி, ஏப். 9: நரிக்குடி பகுதியில் தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்படும் என திமுக கூட்டணி, இந்திய முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி வாக்குறுதி அளித்துள்ளார். ராமநாதபுரம் மக்களவை தொகுதி, திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி, விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ ஆகியோர், நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள நரிக்குடி, உலக்குடி, உளுத்திமடை, வீரசோழன், மீனாக்குளம் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளர் நவாஸ்கனி பேசியதாவது: நரிக்குடி பகுதியில் உள்ள கிருதுமால் நதி மூலம் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், வைகை ஆற்று நீரை இப்பகுதிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு வங்கி விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும், நரிக்குடி பகுதியில் வேலை வாய்ப்பு அமைய, தொழில் பயிற்சி மையம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார். இந்த பிரசாரத்தின் போது மூத்த திமுக உறுப்பினர் முகமது ஜலீல், நரிக்குடி, திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள் ப.பா.போஸ், கண்ணன், பொன்னுத்தம்பி, சந்தனப்பாண்டி, பொதுகுழு உறுப்பினர்கள் சந்திரன், கமலி பாரதி உள்பட மதச்சார்பற்ற கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Nawazaki ,
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்