×

அதிமுக அரசு தூக்கி எறியப்படும் வழி தெரியாமல் அவதி கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டும்

சாயல்குடி, ஏப் 8: மன்னார் வளைகுடா கடல்பகுதியான கன்னிராஜபுரம் ரோச்மா நகர், நரிப்பையூர், மூக்கையூர், மாரியூர், ஒப்பிலான், கீழமுந்தல், வாலிநோக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி கடற்கரை மிகவும் ஆழமான பகுதி என்பதால் மீன்பிடித் தொழில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இக்கடற்கரை கிராமங்களில் அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு கடற்கரைகளில் தெருவிளக்கு, சாலை வசதி, மீன் பதனிடும் அறை, மீன் வலை பாதுகாப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி சிரமப்படுவதாக கூறுகின்றனர்.

மேலும் அருகருகே கிராமங்கள் உள்ளதால், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வழி தெரியாமல் மீனவர்கள் அவதிப்படுவதாக கூறுகின்றனர். மேலும் மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் ரூ.113.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.க கடந்த மார்ச் 4ம் தேதி திறக்கப்பட்டு, பணிகள் முழுமையடையாமல் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒதுக்கப்பட்ட நிதியில் மிச்சம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அந்த நிதி ஆதாரத்தை வைத்து மூக்கையூரில் கலங்கரை விளக்கம் ஒன்றை அமைத்தால், மூக்கையூர் மட்டுமின்றி, ரோச்மா நகர், ஒப்பிலான், மாரியூர் மீனவர்களும் பயன்பெறும் நிலை உள்ளது. எனவே மூக்கையூரில் கலங்கரை விளக்கம் அமைத்து தரவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : lighthouse ,AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...