×

வாழப்பாடியில் கள்ளக்குறிச்சி அமமுக வேட்பாளர் பிரசாரம்

வாழப்பாடி, ஏப்.8: கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற அமமுக வேட்பாளர் கோமுகி மணியன் வாழப்பாடியில்தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் கோமுகி மணியன் நேற்று வாழப்பாடி ஒன்றியம் சிங்கிபுரத்தில் கட்சி அலுவலகம் திறந்து வைத்தார். பின்னர் கோலாத்துக்கோம்பை,முத்தம்பட்டி உள்பட 20 ஊராட்சிகளில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து வாழப்பாடி, பேளூர், புதுப்பாளையம், சந்தைபேட்டை, பஸ் ஸ்டாண்ட், செல்லியம்மன் நகர், காளியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் கோமுகி மணியன் பரிசு பெட்டி சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாழப்பாடி ஒன்றியசெயலாளர் தங்கராஜீ, தலைமையில்ஏற்காடு முன்னால் எம்எல்ஏ சரோஜா, சேலம் மாவட்ட ஊராட்சி குழு முன்னால் தலைவர் சண்முகம், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் வரதராஜு, வாழப்பாடி அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் வீரமுத்து, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலளார் விஜயன், வாழப்பாடி நகரச் செயலாளர் வெங்கடாஜலம், முன்னாள் கவுன்சிலர் முருகேசன் உள்ளிட்ட பலர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags : candidate ,Kallakurichi Ammukh ,
× RELATED செலவு செய்ய பணமில்ல… பூரி காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்