×

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் நவாஸ்கனி வாக்குச் சேகரிப்பு

ராமநாதபுரம், ஏப். 4: ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் நவாஸ்கனி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் பிராசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளராக நவாஸ்கனி போட்டியிடுகிறார். நேற்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஆவுடையார் கோயில் ஒன்றியத்தில் திருப்புனவாசல், துவாக்குடி பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தர். அவருக்கு திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் வரவேற்பளித்தனர். நவாஸ்கனி பேசுகையில், ‘இப்பகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன். தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். வாக்கு சேகரிக்கும் போது திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, திமுக முன்னாள் எம்எல்ஏ உதய சண்முகம்,, காங்கிரஸ் ஒன்றிய செயலாளர் கணேசன், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உடனிருந்தனர்.

Tags : Nawazaki ,polling station ,assembly constituency ,Aranthangi ,constituency ,Ramanathapuram ,
× RELATED மேற்கு வங்காளத்தில் வாக்கு மையத்தில்...