×

விதிமுறைகளுக்கு மாறாக நிலத்தடிநீர் எடுப்பதை தடுக்ககோரி கிராமத்தினர் கலெக்டரிடம் மனு

ராமநாதபுரம், ஏப். 3: விதிமுறைக்கு மாறாக நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்க கோரி தளிர்மருங்கூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தளிர்மருங்கூர் கிராமத்தில் 17க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் பொதுக்கிணறுகள் உள்ளன. விவசாயம், குடிநீர் தேவைகளுக்காக கிணறுகளை பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், அதிலும் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தனி நபர்கள்  சிலர் விதிமுறையை மீறி பெரிய அளவில் கிணறு அமைத்து தண்ணீர் எடுக்கின்றனர். இதன் மூலம் நிலத்தடிநீர் அதிக அளவில் உறிஞப்படுவதால் அருகில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் குறைந்து வறண்டுவிடும் நிலையில் உள்ளது. தனியார் தண்ணீர் எடுக்கும் கிணறுகளை தடுக்கக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கலெக்டரிடத்தில் மனு அளிக்க வந்தனர். மேலும் கிராமத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags : petitioner ,collector ,village ,Gori ,
× RELATED அரசு, தனியார் தொழிற்நிலையங்களில்...