×

சேலம் மேற்கு தொகுதியில் வீட்டில் பதுக்கி வைத்த 81 மதுபாட்டில் பறிமுதல்

சேலம், மார்ச் 29:சேலம் மேற்கு தொகுதியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், வீட்டில் பதுக்கி வைத்த 81 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி  நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையொட்டி, சேலத்தில் 32 பறக்கும் படையும் 33 நிலைக்குழுக்களும் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடந்து வருகிறது. இதில் ₹50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப் பட்டால், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவரை சேலம் மாவட்டத்தில் ₹4.73 கோடி, 45 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய நல்ல கவுண்டம்பட்டியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அங்குள்ள ஒரு வீட்டில், மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. பச்சியம்மாள் என்பவரின் வீட்டில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அங்கு விதிமுறையை மீறி 81மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து 81 மதுபாட்டிலை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், சேலம் மேற்கு தொகுதி தேர்தல் உதவி அலுவலர் சாரதா ருக்குமணியிடம் ஒப்படைத்தனர்.

Tags : brothels ,constituency ,Salem West ,
× RELATED தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இடிதாங்கி பொருத்தம்..!!