×

குடிநீருக்காக 2 கி.மீ பயணம் சிரமத்தில் பரமக்குடி மக்கள்

பரமக்குடி, மார்ச் 29: பரமக்குடி நகராட்சியில் பல வார்டுகளில் ஒரு வாரமாக நிலவும் குடிநீர் பிச்சனையால் பொதுமான குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். காவிரி கூட்டு குடிநீர் திட்டம் பராமரிப்பு இல்லாமல் சாலைகளிலும், தெருகளிலும் வீணாகி வருகிறது. இந்நிலையில் பரமக்குடி நகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாலன் நகர், பொன்ணையாபுரம், காட்டுபரமக்குடி, பாரதி நகர் உள்ளிட்ட வார்டுகளில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் இல்லாமல் உள்ளது. அப்படியே தண்ணீர் திறந்துவிட்டாலும் அது குடிக்கும் வகையில் இல்லாமல் உப்பு தண்ணீராக உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த பகுதிகளில் பல மாதங்களாகவே குடிநீர் பிரச்னை உள்ளது. இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், அதிகாரிகள் இதுவரையிலும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் காலிக்குடங்களுடன் தெருக்களில் காத்திருக்கின்றனர். வார்டுகளில் உள்ள குடிநீரை முறையாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யாமல் உள்ளது. இதனால் பெண்கள் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிக்க தண்ணீர் எடுத்து வரவேண்டியுள்ளது. குறிப்பிட்ட நாட்களில் வரும் தண்ணீரில் கலங்கலாகவும், அசுத்தமாகவும் உள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் அதிகாரிகள் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Tags : trip ,Paramakudi ,
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...