×

பார்த்திபனூர் வாரச்சந்தையில் அடிப்படை வசதி மேம்படுத்தப்படுமா?

ராமநாதபுரம், மார்ச் 28: பார்த்திபனூர் வாரச்சந்தையில் சாலையோரத்தில் கடைகள் அமைக்கப்படுவதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.பார்த்திபனூர் கிராமத்தில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பார்த்திபனூர், கமுதி சாலையை ஆக்கிரமித்து சாயோர கடைகள் அமைக்கப்படுகின்றன. சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான கிராம மக்கள் வாரச்சந்தைக்கு வருகின்றனர். இதனால் கமுதி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.சாலையோரத்தில் பொதுமக்கள் நின்று பொருட்களை வாங்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரின் வசதிக்காக காய்கறி கடைகள், பழக்கடைகள் அமைக்கப்பட்டாலும் சாலையை ஆக்கிரமிப்பதால் வாகன ஓட்டுநர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினர் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி சாலையை ஆக்கிரமிக்கும் வியாபாரிகளுக்கு சந்தை பகுதியிலேயே நிரந்தரமாக கடை அமைக்க ஏற்பாடு செய்தால் மட்டுமே வரும் காலங்களில் விபத்து அபாயத்தை தவிர்க்க முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது.அப்பகுதியை சேர்ந்த சங்கர் கூறுகையில், குறுகிய சாலையில் இருபுறமும் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. கடைகளின் அருகே குடியிருப்பு வீடுகளும் அதிகமாக உள்ள நிலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஊராட்சி நிர்வாகத்தினர் சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.


Tags : Parthibanur ,
× RELATED கமுதி பகுதியில் நாளை மின்தடை