×

சேலத்தில் கலாஞ்சலி கைவினை பொருட்கள் கண்காட்சி

சேலம், மார்ச் 27: சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில் உத்திரப்பிரதேச கைவினை கலைஞர்கள் சங்கம் சார்பில், அகில இந்திய அளவிலான கைவினைப் பொருட்கள் கண்காட்சி வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.இதுகுறித்து கலாஞ்சலி மேலாளர் துபேல் கூறுகையில், இக்கண்காட்சியில் மத்திய-மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற சிற்பக் கலைஞர்கள் நோடியாக கலந்து கொண்டு தங்களது கலைத்திறன் பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். ₹10 முதல் ₹27000 மதிப்புள்ள பொருட்கள் உள்ளன. மொரதாபாத் பித்தளைப் பொருட்கள், சிற்பங்கள், ஜெய்பூரி லாக் வளையல்கள், சில்க் பெயிண்டிங்ஸ், குஷின் கவர்ஸ், மெட்டல் மற்றும் பிளாக் மெட்டல், மெத்தை விரிப்புகள், தலையணை உறைகள், பெண்களுக்கான 100 சதவீத காட்டன் சுடிதார்கள், சேலைகள் மற்றும் பீங்கான் பொருட்கள், நவதானிய சுவாமி சிலைகள், தோல்பைகள் மற்றும் காலணிகள், ஐதராபாத் முத்து, பவளம் ராசிக்கற்கள், ஐம்பொன் ஆபரணங்கள், நவராத்திரி கொலு பொம்மைகள் குவிக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறுகிறது. கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களுக்கு 10 முதல் 20 சதவீதம் வரையிலும் சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது என்றார்.

Tags : Kalahandi Craft Products Exhibition ,Salem ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...