×

மேச்சேரி அருகே நிழற்குடை இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதி

மேச்சேரி, மார்ச் 27: மேச்சேரி அருகே குள்ளமுடையானூரில் நிழற்குடை இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேச்சேரி அருகே குள்ளமுடையானூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்றியுள்ள கோனூர், பூரல்கோட்டை, பொட்டனேரி, கந்தனூர், உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்ப்பட்ட மாணவ-மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள் கிராம பகுதியில் இருந்து பள்ளிக்கு ஒவ்வொரு நாளும் அரசு பேருந்தில் தான் பயணிக்க வேண்டும். அந்த வழியாக அரசு நகர பேருந்து குறித்த நேரத்திற்கு மட்டுமே வருவதால் காலை-மாலை வேளையில் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.மேலும், பள்ளியை ஒட்டி மேட்டூர் -சேலம் செல்லும் மாநில நெடுஞ்சாலை மிகவும் தாழ்வாக இருப்பதால் அதில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால், அப்பகுதியில் தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும் மாணவர்கள் நீண்ட நேரம் பேருந்திற்காக சாலையோரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால், ஒவ்வொரு நாளும் ஆபத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மழை மற்றும் வெயில் காலங்களில் மாணவர்கள் பொதுமக்கள் ஒதுங்குவதற்கு கூட நிழற்கூடங்கள் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, அப்பகுதியில் நிழற்கூடம் மற்றும் வேகத்தடை அமைத்தால் மட்டுமே பேருந்திற்காக காத்திருக்கும் மாணவர்களும், பொதுமக்களும் பாதுகாப்பாக பேருந்தில் ஏரி பயணிக்க முடியும். எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Meycheri ,
× RELATED மேச்சேரி அருகே கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் கட்டுமான பணி