×

அரசு பள்ளி மாணவர்கள் சோக்கைக்கு வீடு வீடாக ஆசிரியர்கள் துண்டு பிரசுரம் விநியோகம்

தொண்டி, மார்ச் 22: தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்காக ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரம் கொடுத்தனர்.
மாணவர்க்ள சேர்க்கை விகிதம் குறைந்து வருவதால் பெரும்பாலான அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றந. இதையடுத்து அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்த அரசு பல்வேறு முயற்ச்சி எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களின் சேர்கையை அதிகரிக்கும் பொருட்டு தலைமை ஆசிரியர் ஜான்தாமஸ் தலைமையில் ஆசிரியர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு வரையிலும் மாணவர்களை சோக்க வலியுறுத்தி பள்ளியின் தரம் குறிதது அடங்கிய துண்டு பிரசுரத்தை கொடுத்தனர். இதுகுறிதது தலைமை ஆசிரியர் கூறுகையில், ‘நடப்பு கல்வி ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்த்து மாவட்டத்திலேயே அதிக மாணவர்களை சேர்த்த பள்ளியாக பெயர் பெற்றது. வரும் கல்வி ஆண்டில் மேலும் அதிகமான பேரை சேர்க்க வேண்டும் என்பதற்காக விடுமுறைக்கு முன்பே பெற்றோரை சந்தித்து எங்கள் பள்ளியின் சிறப்பு அம்சங்களை எடுத்துக் கூறி தனியார் பள்ளியில் சேர்ப்பதை தவிர்த்து அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி வரகிறோம்’ என்றார்.

Tags : School school students ,teachers ,
× RELATED அரசு உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு...