×

தளி அருகே மதகொண்டப்பள்ளியில் இரும்பு குடோனில் தீவிபத்து

தேன்கனிக்கோட்டை, மார்ச் 20: தளி அருகே மதகொண்டப்பள்ளியில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து தேசமானது. கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளியில் அப்துல்பசீர் (56) என்பவர் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கி விற்கும் தொழில்செய்து வருகிறார்.  நேற்று மதியம் இவரது குடோனில் திடீரென தீபற்றிக்கொண்டது. அப்போது குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக இருந்ததால் தீ மளமள என பரவியுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தீயை அனைக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து  தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.  தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தளி போலீசார், தீவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags : Iron Kuton ,Thali ,Religious School ,
× RELATED நீலகிரி மாவட்டம் அருகே தீக்குளித்த...