×

ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

 

ஓசூர், ஏப்.21: முகூர்த்த நாட்கள் என்பதால், ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சாமந்திப்பூ, செண்டுமல்லி, ரோஜா உள்ளிட்ட மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை செய்யப்படும் பூக்களை, விவசாயிகள் ஓசூர் மலர் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்குச் செல்கிறது. இந்நிலையில், தெலுங்கு, தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஓசூர் மலர் சந்தையில் பூக்கள் விற்பனை அமோகமாக இருந்தது.

தொடர்ந்து ராம நவமியை தொடர்ந்து முகூர்த்த நாட்கள் உள்ளதால், பூக்கள் விலை ஏற்றமாகவே உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று ஓசூர் மலர் மார்க்கெட்டிற்கு 300 டன் பூக்கள் விற்பனைக்கு வந்தன. இதில் ஒரு கிலோ சாமந்திப்பூ ₹360க்கும், ஐஸ்வர்யா, புஸ்க்கின் ஒயிட் ரக சாமந்திப்பூ விலை ஏற்றமாகவே இருந்தது. ரோஜா பூ ₹140, குண்டுமல்லி ₹400, செண்டுமல்லி ₹80-க்கு விற்பனையானது. ரோஸ் கிலோ ₹140, சம்பங்கி ₹300, அரளி ₹400, சம்பங்கி 300ஆக இருந்தது. மலர் சாகுபடி குறைந்தாலும் தொடர்ந்து விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Hosur market ,Krishnagiri district ,Hosur ,Dhenkanikottai ,Thali ,Kelamangalam ,
× RELATED வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்