×

சமூக வலைத்தளங்களை பெண்கள் கவனமாக கையாள வேண்டும் ராமநாதபுரம் சரக டிஐஜி தகவல்


ராமநாதபுரம், மார்ச் 8: சமூக வலைதளங்களை எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும் என மகளிர் தின வாழ்த்து செய்தியில் டிஐஜி காமினி கூறினார்.ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட டிஐஜியாக பணிபுரிந்துவரும் காமினி மகளிர் தின வாழ்த்து செய்தியில் கூறியதாவது,பொருளாதாரத்தில் உயர்ந்து வாழ்ந்தாலும் பெற்றோர்களை அரவணைத்து குடும்ப உறுப்பினர்களோடு இணைந்து வாழ வேண்டும்.பள்ளி, கல்லூரியில் பயிலும் பெண்கள் தன்னம்பிக்கையோடு இருக்கவேண்டும். இளைய தலைமுறையினர் சமூக பொறுப்போடு செயல்படவேண்டும். கலாச்சார பண்பாட்டை பாதுகாக்க வேண்டும். செல்போன், சமூக வலைதளங்களை கவனத்தோடு கையாள வேண்டும். வேலைக்கு செல்லும் பெண்கள் கவனம் சிதறல் இல்லாமல் பணியாற்ற வேண்டும். வெளியில் செல்லும் பெண்கள் பெற்றோர், குடும்பத்தினரை மனதில் நினைத்து சென்று வந்தால் பிரச்சனைகள் ஏதும் வராது. வாழ்வில் முன்னேற்றமடைய கடுமையான உழைப்பு அவசியம். எந்த ஒரு பிரச்சனைகளையும் பெற்றோரிடம் தாமதிக்காமல் தெரிவிக்க வேண்டும். மகளிர் அனைவரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்றார்.

Tags : Ramanathapuram Shakthi DIG ,women ,
× RELATED ‘மேட்ரிமோனியல்’ இணையதளம் மூலம் 7...