பரமக்குடியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

பரமக்குடி, மார்ச் 1: பரமக்குடியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். பரமக்குடியில் சந்தை கடை, காக்காதோப்பு, பெருமாள்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தினகரன் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளிட்டு வருகிறது. இந்நிலையில் உரப்பளி வைகை ஆற்று பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணையில் ஈடுபட்டார். இந்நிலையில், வைகை ஆறு ரீச் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சின்னக்கடையை சேர்ந்த சுரேஷ்(33), வசந்தபுரத்தை சேர்ந்த திவாகரன்(28) போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

× RELATED மக்களின் பிரச்னைகளுக்கு பாமக தொடர்ந்து போராடும்: ராமதாஸ் பேச்சு