×

தொண்டி பகுதியில் இணையதள பிரச்னையால் இயங்காத ஏடிஎம்கள்

தொண்டி,  பிப். 20: தொண்டி பகுதியில் உள்ள அனைத்து வங்கி ஏடிஎம்களும் சில நாள்களாக  மூடி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல்  சிரமப்பட்டு வருகின்றனர். தொண்டியில் ஸ்டேட் வங்கி உள்பட ஐந்து  வங்கிகள் உள்ளது. இந்த வங்கிகளுக்கு தனியாக ஏடிஎம் உள்ளதால்  இப்பகுதிமக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. கடந்த சில தினங்களாக அனைத்து  வங்கியின் ஏடிஎம்களும் இணையதள பிரச்னை மற்றும் பணம் இல்லை என்பன உள்ளிட்ட  காரணங்களால் மூடப்பட்டுள்ளது. இது இப்பகுதி மக்களுக்கு பெரும் பிரச்னையாக  உள்ளது. வங்கிகளுக்கு சென்று அதிக நேரம் செலவழித்து பணம் எடுக்க முடியாமல்  திண்டாடி வருகின்றனர்.

இது குறித்து வங்கி உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி ஏடிஎம்களை விரைவில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாதிக் பாட்சா கூறியதாவது, மாவட்டத்தில் அதிக வணிக நிறுவனங்கள் உள்ள பகுதி  என்பதால் அதிகளவு பணம் புழங்கும் பகுதியாகவும் தொண்டி உள்ளது. இரவு பகல் என  அனைதது நேரங்களிலும் மக்கள் ஏடிஎம்மை பயன்படுத்தி வந்தனர். வியாபாரிகள்  அதிகளவில் பயனடைந்து வந்த நிலையில், சில நாள்களாக சொல்லி வைத்தார் போல்  அனைத்து வங்கி ஏடிஎம்களும் செயல்படாமல் உள்ளது. அதனால் அந்தந்த வங்கி அதிகாரிகள்  கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : tail area ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை