×

பி.சி.பட்டியில் ஆக்கிரமிப்பை அகற்ற பெண்கள் மனு

தேனி, பிப். 12: தேனி அருகே பி.சி.பட்டியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நடைபாதையை மீட்டுத் தரக்கோரி பெண்கள் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டி சஞ்சய்காந்தி தெருவில் குடியிருக்கும் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று கலெக்டர் பல்லவிபல்தேவிடம் அளித்தனர். இம்மனுவில், சஞ்சய்காந்தி தெருவில் தனிநபர் ஒருவர் சாலை நடைபாதையை ஆக்கிரமித்துள்ளார். இதனால் இச்சாலையில் பொதுமக்கள் செல்லமுடியாமல் அவதிப்படுகிறோம். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனர்.
இதனையடுத்து, நடைபாதை ஆக்கிரமிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் தாலுகா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags : Women ,PCC ,
× RELATED புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3...