×

புகையிலை விற்ற 3 பேர் கைது

 

போடி, ஜூன் 14: போடி நகர் காவல் நிலைய எஸ்ஐ இளங்கோவன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முருகன் (60) என்பவரது பெட்டிக்கடையில் போலீசார் சோதனையிட்டனர். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 15 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் போடி ரெட்டை வாய்க்கால் பகுதியில் குமார் (60) என்பவரது கடையில் 20 புகையிலை பாக்கெட்களும், திருமலாபுரம் காமராஜர் சிலை அருகே குப்பகிரியை சேர்ந்த கார்த்திகேயன் (44) என்பவரது பெட்டிக்கடையில் 15 புகையிலை பாக்கெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் முருகன், குமார், கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புகையிலை விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : BODI ,BODI NAGAR POLICE STATION SI ILANGOWAN ,Murugan ,
× RELATED காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை: போடியில் 6 கடைகளுக்கு அபராதம்