×

உடல் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

 

மூணாறு, ஜூன் 12: கேரளா மாநிலம் மூணாறு அருகே உள்ள மாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் உடல் எரிந்த நிலையில் மர்மமான முறையில் தங்கச்சன்(54) என்பவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மாங்குளம் 33 என்ற பகுதியில் தங்கச்சன் மற்றும் அவரது மகன் தனியாக வசித்து வருகின்றனர். இந்த பகுதி மாங்குளத்தில் இருந்து தொலைவில் உள்ளது என்பதால் ஆள்நடமாட்டம் குறைவாகவே இருக்கும். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மகன் வீட்டிலிருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீட்டின் அருகே உள்ள கூடாரத்தில் தங்கச்சன் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து மூணாறு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மூணாறு போலீசார், தங்கச்சன் சடலத்தைக் கைப்பற்றி, அவரது இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ஒருவரைப் பிடித்து மூணாறு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

The post உடல் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Munnar ,Thangachan ,Mankulam Panchayat ,Munnar, Kerala ,
× RELATED மூணாறு அருகே பரிதாபம்; செந்நாய்கள் தாக்கி 40 ஆடுகள் உயிரிழப்பு