×

கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

 

சின்னமனூர், ஜூன் 12: சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். அதன் மூலம் கிடைக்கும் பாலை ஆவின் டெப்போக்கள் மற்றும் பொதுமக்களுக்கும், கடைகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் மாடுகளை வளர்க்கும் இடங்களுக்கே நேரடியாக சென்று அதிகாரிகள் கால்நடைகளை பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மேலும், தேவையான மருந்துகளையும் வழங்கி வருகின்றனர்.

தற்போது மாடுகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கண்டறியப்பட்ட நிலையில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் டாக்டர்கள் சிவரத்தினா, பாஸ்கர் ஆகியோர் வழி காட்டுதலின் பேரில் சின்னமனூர் கால்நடை துறை உதவி மருத்துவர் வினோத், கால்நடை ஆய்வாளர் முகமது நியாசிதீன் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த நேரடி தடுப்பூசி முகாமில் கோமாரி நோய் தடுப்பூசி போடுவதால் மாடு வளர்ப்போர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

The post கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Aavin ,
× RELATED கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு