×

சமூகநலத்துறை பணியிடங்களுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

 

தேனி, ஜூன் 14: தேனி மாவட்டத்தில் சமூக நலத்துறையில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான 2 பணியிடங்களுக்கு வருகிற 20ம் தேதிக்குள் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பொது இடங்களில் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிட சமூக நலத்துறையின் சார்பில், ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள 1 மைய நிர்வாகி மற்றும் 1 வழக்கு பணியாளர் ஆகிய 2 பதவிகளுக்கான பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

இப்பணியிடங்களுக்கான தகுதிகள் மற்றும் முழுவிபரங்களை www.theni.nic.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட பதவிக்கு தகுதியுள்ள நபர்கள் தன்விபர குறிப்பு மற்றும் சான்றிதழ் நகல்களுடன் வருகிற 20ம் தேதிக்குள் மாவட்ட சமுக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண் 67, முன்றாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

The post சமூகநலத்துறை பணியிடங்களுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Theni ,Collector ,Shajivana ,Social Welfare Department ,Dinakaran ,
× RELATED காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை: போடியில் 6 கடைகளுக்கு அபராதம்