×

கிணற்றில் மூழ்கி விவசாயி பலி

 

பெரியகுளம், ஜூன் 15: பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித் பாபு (43). விவசாயியான இவருக்கு சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. நேற்று முன் தினம் தென்னந்தோப்பில் உள்ள 40 அடி கிணற்றில் தனது நண்பர்கள் ரகு, ரவி ஆகியோருடன் அஜித் பாபு நீச்சல் அடித்து குளித்து கொண்டிருந்தார். மாலை 4:00 மணிக்கு நண்பர்கள் படி ஏறிய பின்னர் அஜித் வரவில்லை. சந்தேகமடைந்து அவரது நண்பர்கள் மீண்டும் தண்ணீருக்குள் தேடி பார்த்தும் அஜித்பாபு கிடைக்கவில்லை. இது குறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 40 அடியில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த அஜித்பாபுவை சடலமாக மீட்டனர். நீந்திக் கொண்டிருக்கும் போது நெஞ்சுவலியால் அஜித் பாபு இறந்தாரா? வேறு காரணமா என தென்கரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

The post கிணற்றில் மூழ்கி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Ajith Babu ,Lakshmipuram Kaliamman Temple Street ,Raghu ,
× RELATED பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி...