×

ஆத்தூர், தலைவாசல் பகுதியில் மரவள்ளி கிழங்கு விற்பனை மும்முரம்

ஆத்தூர், பிப்.8:  ஆத்தூர், தலைவாசல் பகுதியில் மரவள்ளி கிழங்கு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஆத்தூர், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், கல்வராயன் மலைப்பகுதியில், மரவள்ளி கிழங்கு அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளது. மரவள்ளிக்கிழங்கிற்கு உரிய விலை கிடைக்காததால், சேகோ ஆலைகளுக்கு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, மரவள்ளி கிழங்கை அறுவடை செய்து ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதியில் மார்க்கெட் மற்றும் கிராமங்களில் மினி வேன்களில் வைத்து, கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து மரவள்ளி கிழங்கு பயிரிட்ட விவசாயிகள் கூறுகையில், ‘சேகோ ஆலை உரிமையாளர்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, மரவள்ளி பயிரிட்ட விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க விடாமல் செய்து வருகிறார்கள். இதனால், மரவள்ளி கிழங்குகளை மார்க்கெட்டில், சில்லரையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகிறனர்.  இதில், சிறு வியாபாரிகள் கிலோ ₹12 முதல் 15 வரை கொள்முதல் செய்து, அதனை கிராமம் கிராமமாக கொண்டு சென்று பொதுமக்களிடம் விற்பனை செய்கின்றனர். மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை கிடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மரவள்ளி கிழங்கை கொண்டு மதிப்பு கூட்டு பொருட்களை தயாரிக்க, விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து, கடனுதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : area ,Thalassery ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது