×

அச்சுறுத்தும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்

கீழக்கரை,பிப்.7: தினைக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு பணிபுரியும் செவிலியர்கள், சிகிச்சைக்கு வரும் பொதுமக்களும் கடும் அச்சத்தில் வந்து செல்கின்றனர்.
கீழக்கரை அருகே தினைக்குளத்தில் மேதலோடை மற்றும் சுற்றியுள்ள 20 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 1982ம் ஆண்டு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்பட்டது. இந்நிலையில் போதிய பராமரிப்பின்றி கட்டிடத்தின் மேற்கூரைகளின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு பொதுமருத்துவம், விஷக்கடி, கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு தலைமை செவிலியர் மற்றும் துணை செவிலியர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கட்டிடத்தின் பெரும்பாலான பகுதிகளில் மேற்கூரைகளின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் இரும்பு கம்பிகள் வெளியில் தெரிந்து கொண்டிருக்கிறது. இதனால் மின் விசிறி இருந்தும் இயக்க முடியால் உள்ளது.

இப்பகுதி மக்கள் கூறுகையில், ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பாதுகாப்பற்ற, உறுதிதன்மை இல்லாமல் இருக்கின்றது. இங்கு மருத்துவ உபகரணங்கள், மருந்து மாத்திரைகள் வைப்பதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும் இங்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் சுகாதார நிலையத்தை சுற்றிலும் கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால் விஷஜந்துகள் அதிகளவில் சுகாதார நிலையத்திற்குள் வருகிறது. அரசு மருத்துவ துறையின் பராமரிப்பிற்காக பல லட்சங்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆகவே கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதார கட்டிடத்தை உடன் இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை