×

தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் இடைத்தரகர் தொல்லையால் பக்தர்கள் கடும் அவதி

கரூர், பிப். 5: கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் இடைத்தரகர் தொல்லையால் பக்தர்கள் படும் அவதி குறித்து அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்களா? என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் தாந்தோணிமலையில் தென் திருப்பதி என அழைக்கப்படும் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் புரட்டாசி பெருவிழா, மாசி மக விழா ஆகிய விழாக்களின்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வெளி மாவட்ட பக்தர்களை குறி வைத்து, இடைத்தரகர் போல செயல்பட்டு வரும் சிலரின் நடவடிக்கையால் பக்தர்கள் கடுமையாக அவ
திப்பட்டு வருகின்றனர்.
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், அந்த கட்சியில் உச்ச பொறுப்பில் இருப்பவர் தனக்கு மிகவும் வேண்டப்பட்டவர் எனக் கூறி, பக்தர்கள் முதல் கோயில் பணியாளர்கள் வரை அபிஷேகம் முதல் அனைத்து பணிகளுக்கும் கூடுதல் பணம் பெற்று செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
கோயிலுக்கு சம்பந்தமேயில்லாமல் இருக்கும் ஒருவரால், அனைத்து தரப்பினரும் கடுமையாக அவதிப்படுவதாகவும் இது குறித்து புகார் தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே அதிகாரிகள் இது குறித்து கண்காணித்து ஆய்வு மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பக்தர்கள்
எதிர்பார்க்கின்றனர்.

Tags : Devotees ,Dantontinam Kalyana Venkatramana Swamy ,
× RELATED அரியானாவில் சுற்றுலா பேருந்து...