×

கடலாடி தாலுகாவில் தலையாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சாயல்குடி, பிப்.5: கடலாடி தாலுகாவில் காலியாக உள்ள 5 கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு தாலுகா அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கடலாடி தாசில்தார் முத்துலெட்சுமி கூறும்போது, கடலாடி தாலுகாவில் காலியாக உள்ள 5 கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் இனசுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளன. மூக்கையூர் வருவாய் கிராமத்திற்கு அருந்ததியர்(முன்னுரிமையற்றவர்), இருவேலி கிராமத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்(முன்னுரிமையற்றவர்) அ.உசிலங்குளம் கிராமத்திற்கு பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்), சிப்பிக்குளம் பொதுப்போட்டி( முன்னுரிமை பெற்றவர்) ஆதரவற்ற விதவை, அலவன்குளம் ஆதிதிராவிடர்( முன்னுரிமை பெற்றவர்) தகுதியானவர்கள் தேவையான சான்றுகளுடன்  15.2.19ம் தேதிக்குள் கடலாடி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்படிவத்துடன் சாதிச் சான்று, இருப்பிடச்சான்று, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, முன்னாள் ராணுவவீரர் அடையாள அட்டை மற்றும் முன்னுரிமை சான்றுகள் மற்றும் தேவையான கல்வி சான்று, இதரசான்றுகள் ஆகியவற்றுடன் சேர்த்து விண்ணப்பத்தை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியாக 5ம் வகுப்பு தேர்ச்சியுடன் 10ம் வகுப்பு தவறியவராக இருக்க வேண்டும். எழுதப்படிக்க, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்கவே ண்டும், 1.7.18அன்று 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

Tags : Thalaiyari ,Kadaladi ,
× RELATED கடலாடியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு: சீரமைக்க கோரிக்கை