×

உப்புத்தண்ணீரை நன்னீராக்கும் பிளாண்ட் அமைக்க கிராமத்தினர் வலியுறுத்தல்

சாயல்குடி, ஜன.31: முதுகுளத்தூர் ஒன்றியத்திலுள்ள காத்தகுளம் ஊராட்சிக்கு உப்புத்தண்ணீரை நன்னீராக்கும் பிளாண்ட் அமைத்து தரவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முதுகுளத்தூர் ஒன்றியம் காத்தாகுளம், எம்.சாலை கிராமத்தில் சுமார் 800 குடும்பங்கள் உள்ளன. இக்கிராமமக்கள் காத்தாகுளத்தில் உள்ள திறந்தவெளி கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்தனர். வறட்சியால் கிணறு வறண்டதால், ஊரணியில் யூனியன் நிர்வாகம் சார்பில் போர்வெல் அமைத்து கொடுக்கப்பட்டது. இதிலும் தண்ணீர் போதுமானதாக வராததால் பொதுமக்கள் தண்ணீரின்றி துயரப்படுவதாக கூறுகின்றனர்.
மேலும் காத்தாகுளம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் உப்பு தண்ணீராக இருப்பதால், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. இதனால் பயன்பாடின்றி உள்ளது. அரசு நிதி வீணடிக்காமல் இருப்பதற்கு, இத்தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், உவர்ப்பு தண்ணீரை நன்னீராக்கும் பிளாண்ட் அமைத்து தரவேண்டும் என கிராமமக்கள் மாவட்ட ஊராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : saline plant ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை