×

தாயுமானவர் குருபூஜை விழா

ராமநாதபுரம், ஜன.31: ராமநாதபுரம் வெளிப்பட்டினம் தாயுமானவர் தபோவனத்தில் தாயுமானவர் குருபூஜை விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழாவில் தாயுமானவர் பாடல்கள், சொற்பொழிவுகள், திருவாசகம் முன்றோதல், பஜனைப் பாடல்கள் பாடும் நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று காலையில் தாயுமானவருக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். குருபூஜை தினத்தில் மட்டும் பக்தர்கள் சன்னதிக்குள் அனுமதிக்கப்படுவதால் ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சுவாமி சதானந்த ஆன்மீக உரையாற்றினார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Tags : Mother Gurupooja Festival ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை